/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜாதக பொருத்தம் இல்லை காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
/
ஜாதக பொருத்தம் இல்லை காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
ADDED : ஆக 08, 2024 09:05 AM
தலைவாசல்: தலைவாசல் அருகே கிழக்குராஜாபாளையத்தை சேர்ந்தவர் ராஜ-பாண்டி, 29. பி.ஏ., பி.எட்., படித்த இவர், திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, தொண்டைப்பாடியை சேர்ந்தவர் அகல்யா, 21. பி.எஸ்சி., படித்துவிட்டு வீட்டில் உள்ளார்.
ஓராண்டுக்கு முன் ராஜபாண்டிக்கு, அகல்யாவை பெண் பார்க்கச்சென்றனர். அப்-போது ஜாதக பொருத்தம் இல்லை என, பெண் வீட்டினர் கூறி-விட்டனர். பின் இருவரும் காதலித்தனர். இந்நிலையில் வேறு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் இரு நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி அவர்கள் திரு-மணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு வீரகனுார் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும் அழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். பெண்ணின் பெற்றோர், திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் ராஜபாண்டியுடன், அகல்-யாவை அனுப்பினர்.