/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலக்கடலையில் வெள்ளைப்புழு கட்டுப்படுத்துவது எப்படி?
/
நிலக்கடலையில் வெள்ளைப்புழு கட்டுப்படுத்துவது எப்படி?
நிலக்கடலையில் வெள்ளைப்புழு கட்டுப்படுத்துவது எப்படி?
நிலக்கடலையில் வெள்ளைப்புழு கட்டுப்படுத்துவது எப்படி?
ADDED : மே 20, 2024 01:41 AM
வீரபாண்டி: நிலக்கடலை செடியில் வெள்ளைப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் பிரியங்கா(பொ) அறிக்கை:
வட்டாரத்தில் பரவலாக தற்போது நிலக்கடலை விதைப்பு பணி நடக்கிறது. நிலக்கடலை செடிகளில் வெள்ளைப்புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டால் திட்டு திட்டாக காய்ந்து வேர்கள், காய்களை உண்டு சேதப்படுத்துவதோடு செடிகள் இறக்கும் நிலை ஏற்படும். இதுபோன்ற இறந்த செடிகள், தாக்குதலுக்குள்ளான செடிகளை எளிதில் பிடுங்க முடியாது.
ஆல, வேப்ப மரங்கள் அருகிலுள்ள செடிகளில் முதிர்ந்த வண்டுகளின் தாக்கம் அதிகம் இருக்கும். இவைகள், இலைகள் அனைத்தையும் தின்று அழித்து விடும். இதை தடுக்க கோடை மழை பெய்ததும், வண்டுகளை கவர்ந்து அழிக்க ஹெக்டேருக்கு ஒரு விளக்கு பொறி அல்லது தீப்பந்தம் அமைக்க வேண்டும். விளக்கு பொறிகளை பயன்படுத்தி மாலை நேரத்தில் வயலுக்கு அருகே வேப்ப மரங்களில் உள்ள வண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும். தாக்கம் அதிகம் உள்ள வயல்களில் போதிய நீர் தேங்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
'குளோரோபைரிபாஸ்' இ.சி., பூச்சிக்கொல்லியை ஒரு ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் அளவில் மணலில் கலந்து தெளித்து கட்டுப்படுத்த முடியும். இந்த வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் பயன்பெற வேண்டும்.

