/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் வளத்தை மேம்படுத்தினால் உரம் வீணாவதை தடுக்கலாம்
/
மண் வளத்தை மேம்படுத்தினால் உரம் வீணாவதை தடுக்கலாம்
மண் வளத்தை மேம்படுத்தினால் உரம் வீணாவதை தடுக்கலாம்
மண் வளத்தை மேம்படுத்தினால் உரம் வீணாவதை தடுக்கலாம்
ADDED : மார் 22, 2024 01:52 AM
அ.பட்டணம்;மண்ணில் உரம் வீணாவதை, மண் வளத்தை மேம்படுத்தி தடுக்கலாம்.
இதுகுறித்து அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி கூறியதாவது:உரம் வீணவதை தவிர்க்க முதலில் மண்வளத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு முதலில், மண்ணில் உள்ள குறைபாடுகளை, மண் பரிசோதனை மூலம் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். பிறகு பயிர்களின் தேவைக்கேற்ப சமச்சீர் உரமிடுவதோடு, மண்வளம் மேம்பட இயற்கை எருக்களை அதிகளவில் இடவேண்டும்.
மட்கக்கூடிய கழிவு, காய்கறி கழிவு, பயிர் கழிவு, கால்நடை கழிவு போன்றவற்றை உபயோகப்படுத்தும்போது மண்ணில் இருந்து பயிர்களால் எடுக்கப்பட்ட சத்துகள், மீண்டும் மண்ணுக்கு போய் சேர வாய்ப்பு ஏற்படும். மட்கக்கூடிய அனைத்து கழிவும், 'கம்போஸ்ட்' தொழில்நுட்பம் மூலம் இயற்கை உரங்களாகவும், மண்புழு உரமாகவும் தயார் செய்து மண்ணில் இட்டு மண் வளத்தை மேம்படுத்த வேண்டும்.
வயல் ஓரங்கள், சாலை ஓரங்களிலும் கிடைக்கக்கூடிய பசுந்தழைகளான எருக்கு, சீமை, அகத்தி போன்ற எளிதில் மட்கக்கூடிய இலைகளையும், பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி போன்றவற்றை மண்ணில் இட்டு, மண்வளத்தை மேம்படுத்தலாம். இயற்கை உரங்களை மண்ணுக்கு இடும்போது மண் பலவித நன்மைகளைப் பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

