/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சமரச வார விழா துவக்கம்: மாவட்ட நீதிபதி விழிப்புணர்வு
/
சமரச வார விழா துவக்கம்: மாவட்ட நீதிபதி விழிப்புணர்வு
சமரச வார விழா துவக்கம்: மாவட்ட நீதிபதி விழிப்புணர்வு
சமரச வார விழா துவக்கம்: மாவட்ட நீதிபதி விழிப்புணர்வு
ADDED : ஏப் 09, 2024 02:08 AM
சேலம்;சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில், சமரச வார விழா நேற்று தொடங்கியது.சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தனி நபர் வழக்கு, பண வசூல், குடும்ப, சொத்து வழக்குகள், காசோலை, மின்வாரியம், தொழிலாளர் நலம், உரிமையியல் உள்ளிட்ட வழக்குகளுக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த, சமரச வார விழா கொண்டாட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதன்படி நேற்று சேலம் சமரச மையத்தில், சமரச வார விழா தொடங்கியது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி பேசுகையில்,'' சமரச மையத்தில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதால், உறவு முறை நல்ல முறையில் பேணப்படுகிறது. தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு, நீதிமன்ற கட்டணம் திருப்பி அளிக்கப்படுகிறது. இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

