sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உழவர்சந்தைக்கு 'இ - நாம்' திட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

/

உழவர்சந்தைக்கு 'இ - நாம்' திட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

உழவர்சந்தைக்கு 'இ - நாம்' திட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

உழவர்சந்தைக்கு 'இ - நாம்' திட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்


ADDED : ஏப் 21, 2024 01:40 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,:சேலம் உழவர்சந்தைக்கு தேவையான தக்காளியை, 'இ - நாம்' திட்டத்தில் கொள்முதல் செய்து வழங்க, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில் நேற்று முன்தினம் தக்காளி விற்பனை, 24.04 டன்னாக இருந்தது, நேற்று, 29.14 டன்னாக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சம் சேலம், சூரமங்கலம் சந்தையில், 7 டன்; தாதகாப்பட்டி சந்தையில், 4.4 டன், அஸ்தம்பட்டி சந்தையில், 2.2 டன் தக்காளி விற்பனை நடந்துள்ளது. அம்மாபேட்டை, மேட்டூர், தம்மம்பட்டி உழவர் சந்தைகளில் கிலோ தக்காளி தலா, 20 ரூபாய், மேச்சேரி சந்தையில், 22 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் வாழப்பாடி, சூரமங்கலம் உள்ளிட்ட, 9 உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ, 24 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே வெளிச்சந்தையில், 20 ரூபாய்க்கு கிடைக்கிறது.

இதுகுறித்து உழவர்சந்தை விவசாயிகள் கூறியதாவது: சேலம் மாவட்ட உழவர்சந்தைகளுக்கு பெரும்பாலும் தர்மபுரி, ஓசூர் பகுதி தக்காளி வரத்து தான் உள்ளது. வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி, அதை உழவர்சந்தைக்கு கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். இதையே, 'இ-நாம்' திட்டத்தில் தர்மபுரி உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள், நேரடியாக சேலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகளுக்கு விற்று அவை உழவர்சந்தைகளில் விற்கும்போது கிலோவுக்கு, 2 - 3 ரூபாய் வரை விலை குறையும். ஆனால் வியாபாரிகள் அதிக லாபம் பார்க்க, கூடுதல் விலை வைத்து விற்பதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் விவசாயிகள், நுகர்வோர் ஒருசேர பயன்பெறும்படி, 'இ - நாம்' திட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us