/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் வேந்தராகும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
/
முதல்வர் வேந்தராகும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
முதல்வர் வேந்தராகும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
முதல்வர் வேந்தராகும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 03, 2024 11:20 AM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை கண்டித்து, பல்கலை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2ம் நாளாக நேற்று மாலை, பல்கலை நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் துணைவேந்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், திரளானோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் கூறியதாவது: துணைவேந்தர் பணி நீட்டிப்பு உத்தரவை, கவர்னர் திரும்ப பெறவேண்டும். இல்லை எனில் தமிழக அரசு, முதல்வர் வேந்தராகும் திட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அதை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். கவர்னர் ஏற்கவில்லை எனில் ஜனாதிபதி ஒப்புதலை பெற்று நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல் கூறுகையில், ''பதவி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டும். துணைவேந்தர் ஜெகநாதன் மீதுள்ள வழக்குகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். மேலும் மாநில முதல்வர்கள் வேந்தாரகும் திட்டத்தை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.