/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பயிர்களில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை அவசியம்'
/
'பயிர்களில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை அவசியம்'
ADDED : மே 26, 2024 07:06 AM
வீரபாண்டி : பயிர்களில் ஒருங்கிணைந்த களை மேலாண் தொழில்நுட்பம் குறித்து வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கிரிஜா அறிக்கை: வீரபாண்டி வட்டாரத்தில் தற்போது பரவலாக பெய்த கோடை மழையால் நிலக்கடலை, பச்சைப்பயறு, உளுந்து, தட்டைப்பயறு ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பயிர்களில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை செய்வது அவசியம்.
நிலக்கடலை பயிரை விதைத்த, 3ம் நாள், ஹெக்டேருக்கு, 3.3 லிட்டர், 'பென்டிமெத்தலின்' மருந்தை, 500 லிட்டர் நீரில் கலந்து தட்டை விசிறி நுண்குழாய் மூலம் தெளிக்க வேண்டும். களைகளை பொறுத்து, 'இமாசிதிபர்', ஹெக்டோருக்கு 750 மி.லி., தெளித்து கட்டுப்படுத்த முடியும்.
களைக்கொல்லிகளை உபயோகிக்காமல் மண் வெட்டியால் விதைத்த, 20 மற்றும் 40ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். களை முளைப்பதற்கு முன், 'ஆக்ஸாடியாசோன்' மருந்தை தெளித்து மண் வெட்டியால் மண்னை அணைத்து வைக்க வேண்டும். நட்சத்திர வடிவ களையெடுக்கும் கருவியை உபயோகிக்க வேண்டும். இதேபோல் களை முளைக்கும் முன், 'மெட்டலாகுளோர்', ஹெக்டேருக்கு, 1 கிலோ அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
பயறு வகை பயிர்களில் களைகளை கட்டுப்படுத்த, 'பென்டிமெத்தாலின்', 2.5 லிட்டர், களை முளைக்கும் முன் விதைப்பு செய்த, 3ம் நாளில் தட்டை விசிறி நுண்குழாய் கருவி மூலம் தெளிக்க வேண்டும். விதைப்பு செய்து, 15வது மற்றும் 30ம் நாளில் கைகளால் களை எடுக்க வேண்டும். இந்த வழிமுறைகளை, விவசாயிகள் பின்பற்ற பயன்பெறலாம்.