/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜோதிடர் வீட்டில் நகை, பணம் திருடிய இருவர் குறித்து விசாரணை
/
ஜோதிடர் வீட்டில் நகை, பணம் திருடிய இருவர் குறித்து விசாரணை
ஜோதிடர் வீட்டில் நகை, பணம் திருடிய இருவர் குறித்து விசாரணை
ஜோதிடர் வீட்டில் நகை, பணம் திருடிய இருவர் குறித்து விசாரணை
ADDED : ஜூன் 09, 2024 04:34 AM
ஆத்துார்: ஆத்துாரில், ஜோதிடர் வீட்டில் காரில் வந்த இருவர், பணம், நகை திருடிச் சென்ற 'சிசிடிவி' வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்துார், விநாயகபுரம், ஜே.கே., நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமோகன், 43. இவர், ஜோதிடம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த, 1ல், தும்பலில் உள்ள சின்னமாமனார் சுப்ரமணி வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம், வீட்டின் வெளிப்புற கதவு உடைத்திருப்பது குறித்து, கிருஷ்ணமோகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவை உடைத்து, 28 பவுன் மற்றும் 3.50 லட்சம் ரூபாய் திருட்டுபோனது தெரியவந்தது. ஜோதிடர் கிருஷ்ணமோகன் புகாரில், ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி'
கேமராவை ஆய்வு செய்தபோது, காரில் வந்த இருவர், ஜோதிடர் வீட்டின் சுவர் ஏறி குதித்து, பணம், நகை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.