ADDED : ஜூன் 14, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், விநாயகபுரத்தை சேர்ந்தவர் விவேக், 31.
துணி வியாபாரி. இவரது வீட்டில் கடந்த மே, 13ல், யாரும் இல்லை. அப்போது மர்ம நபர் புகுந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், நகை, பணத்தை திருடிச்சென்றார். விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூரை சேர்ந்த ஹரிஹரன், 25, திருடியது தெரிந்தது. அவரை, ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, ஆத்துார் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முனுசாமி நேற்று, ஹரிஹரனுக்கு, 2 மாத சிறை, 600 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.