/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மீண்டும் சிறுதானிய சாகுபடி ஜருகுமலை விவசாயிகள் ஆர்வம்
/
மீண்டும் சிறுதானிய சாகுபடி ஜருகுமலை விவசாயிகள் ஆர்வம்
மீண்டும் சிறுதானிய சாகுபடி ஜருகுமலை விவசாயிகள் ஆர்வம்
மீண்டும் சிறுதானிய சாகுபடி ஜருகுமலை விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 01, 2024 11:54 PM
பனமரத்துப்பட்டி:சேலம் மாவட்டம், ஜருகுமலையில் உள்ள மலைவாழ் மக்கள், பருவ மழையை எதிர்நோக்கி மானாவாரியாக சிறுதானியங்கள் சாகுபடி செய்தனர். தினமும் வருமானத்தை எதிர்பார்த்து அரளி சாகுபடிக்கு மாறினர்.
அதன் விலை, ஏற்ற, இறக்கமாக உள்ளதோடு, கூலி ஆட்கள் பற்றாக்குறையால், மீண்டும் சிறுதானிய சாகுபடிக்கு மாறியுள்ளனர். சத்துமிகுந்த சிறுதானியம் சாப்பாட்டுக்கு தேவை என்பதை உணர்ந்து மீண்டும் சிறுதானியம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பனிவரகு, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியம் மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ளன.
]இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறுகையில், ''ஜருகுமலையில் பனிவரகு, சாமை, ராகி போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இந்த முறை குதிரைவாலி விதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4 விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அதன் மகசூல் எப்படி உள்ளது என்பதை பார்த்து, மற்ற விவசாயிகளும் சாகுபாடி செய்ய வழங்கப்படும்,'' என்றார்.