/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொகுதி வளர்ச்சிக்காக பணிகள் மேற்கொள்வேன் கள்ளக்குறிச்சி தி.மு.க.,வேட்பாளர் மலையரசன் உறுதி
/
தொகுதி வளர்ச்சிக்காக பணிகள் மேற்கொள்வேன் கள்ளக்குறிச்சி தி.மு.க.,வேட்பாளர் மலையரசன் உறுதி
தொகுதி வளர்ச்சிக்காக பணிகள் மேற்கொள்வேன் கள்ளக்குறிச்சி தி.மு.க.,வேட்பாளர் மலையரசன் உறுதி
தொகுதி வளர்ச்சிக்காக பணிகள் மேற்கொள்வேன் கள்ளக்குறிச்சி தி.மு.க.,வேட்பாளர் மலையரசன் உறுதி
ADDED : ஏப் 02, 2024 04:48 AM
பெ.நா.பாளையம்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மலையரசன், நேற்று பெத்தநாயக்கன்பாளையம், பழனியாபுரம், தளவாய்பட்டி, ஒட்டப்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஓலப்பாடி, புத்திரகவுண்டன்பாளையம், முத்தாக்கவுண்டனுார், வீரக்கவுண்டனுார், உமையாள்புரம், ஏ.கரடிப்பட்டி, ஆரியப்பாளையம், களரம்பட்டி, கோபாலபுரம், மேற்குராஜாபாளையம், தமையனுார், வடுகத்தம்பட்டி ஆகிய ஊர்களில் வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்.
அப்போது, வேட்பாளர் மலையரசன் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளராக போட்டியிடும் எனக்கு, கடந்த, 30ல், முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள், மத்திய அரசின் நிர்வாக சீர்கேடுகளை எடுத்துரைத்தார். கட்சியினர் அதிகளவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
வெற்றி பெற்ற பின், உங்களின் ஒருவனாக இருந்து தொகுதி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வேன். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், அனைத்து குடும்பங்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்தால் போதும்.
தமிழக உரிமைகளை மீட்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிகளவில் திட்டங்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அன்பு, பேரூர் செயலாளர் வெங்கடேஸ்வரன், கூட்டணி கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

