/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
/
காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
ADDED : ஏப் 28, 2024 04:31 AM
சேலம்: சேலம், காவேரி மருத்துவமனையில் சமீபத்தில், ஏ.பி.ஒ., இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பாரம்பரிய, மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இணக்க ரத்த வகை தேவைப்படும். ஏ.பி.ஒ., இணக்க மற்ற மாற்று அறுவை சிகிச்சை, இப்பிரச்னைக்கு சிறந்த தீர்வு. ஏனெனில் இந்த சிகிச்சைகளில் வெவ்வேறு ரத்த வகை கொண்ட நன்கொடையாளர்களிடம் உறுப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்த அணுகுமுறையில் நிராகரிப்பை தடுக்க மேலும் தீவிர நோய் எதிர்ப்பு தடுப்பு தேவைப்படுகிறது. இருப்பினும் அதிக அளவு நோய் எதிர்ப்பு தடுப்பு நோய் தொற்று அபாயத்தை அதிகரிக்கும். அதனால் தொற்று அபாயத்தை குறைத்து அதேநேரம் உறுப்புகளை ஏற்கும் அளவில் தடுப்பை சமநிலைப்படுத்துவது ஒரு நுட்ப செயல்முறை.
காவேரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை, ரத்த மாற்றத்துறை மருத்துவ நிபுணர்கள் அபிராமி, சுவாமிநாதன் சம்பந்தம், ரமேஷ் எத்திராஜன், கிஷோர் குமார், ஓம்பிரகாஷ் உள்ளிட்டோருடன், மயக்க மருந்து துறை குழுவினர், இந்த சவால்களை வெற்றிகரமாக சமாளித்து செயல்பட்டனர்.
அவர்கள், சேலத்தில், தாய், மகன் இடையேயான, ஏ.பி.ஒ., இணக்கமற்ற சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சையை முதல்முறை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்து, 3 மாதங்களுக்கு பின், நோயாளி நன்றாக உள்ளார்.
இது ஏராளமான நன்கொடையாளர்களைப் பெறவும், அவர்களின் சிகிச்சை விளைவுகள் மேம்படவும், ஏ.பி.ஒ., இணக்க மற்ற மாற்று அறுவை சிகிச்சை வழிவகுக்கிறது. இக்குழுவினரை, சேலம் காவேரி மருத்துவமனை இயக்குனர் செல்வம் பாராட்டினார்.

