/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கராத்தேவில் சாம்பியன் மாணவர்களுக்கு பாராட்டு
/
கராத்தேவில் சாம்பியன் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 31, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மலேசியாவில் சர்வதேச கராத்தே போட்டி கடந்த, 26ல் நடந்தது.
அதில் சேலத்தில் இருந்து தனியார் அகாடமியை சேர்ந்த, 24 மாணவியர், 3 மாணவர் பங்கேற்றனர். அவர்கள், 29 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினர். அவர்கள் நேற்று சேலம் வந்தனர். அவர்களுக்கு ரயில்வே ஸ்டேஷ னில், தனியார் அகாடமியினர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து, மாணவ, மாணவியர் வாழ்த்து பெற்றனர். பயிற்சியாளர்கள் விச்சு, மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.