/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில தேக்வாண்டோவில் தங்கம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
/
மாநில தேக்வாண்டோவில் தங்கம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
மாநில தேக்வாண்டோவில் தங்கம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
மாநில தேக்வாண்டோவில் தங்கம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
ADDED : செப் 09, 2024 07:14 AM
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த குரால்நத்தம் ஊராட்சி கோணமடுவை சேர்ந்த யுவராஜ் - குணவதியின் மகள் சாகித்யா, 9. குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த ஆக., 30ல் திருச்சியில் நடந்த மாநில தேக்வாண்டோ போட்டியில், சப் - ஜூனியர், 16 கிலோ பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இதனால் அவரை, கடந்த, 6ல் குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர். இப்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம் சேலத்தில் உள்ள தேக்வாண்டோ கிளப் உப தலைவராக உள்ளார். அவரது முயற்சியால் இப்பள்ளி மாணவர்களுக்கு, 2018 முதல் தேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தெய்வநாயகம் கூறுகையில், ''தனியார் பள்ளிகள், நகர் பகுதி மாணவர்களுக்கு மட்டும் தேக்வாண்டோ பயிற்சி கிடைக்கிறது. கிராம பகுதி மாணவர்களுக்கு கிடைக்கவே, பயிற்சியாளர் மணி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. திறமையான மாணவியர், கிராமத்தில் உள்ளனர் என்பதற்கு எடுத்துகாட்டாக சாகித்யா சாதித்துள்ளார். அவர் தேசிய போட்டிகளில் பங்கேற்கும் செலவை, ஆசிரியர்களே ஏற்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.