/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கும்பாபிேஷக விழா 46 கேமரா பொருத்தம்
/
கும்பாபிேஷக விழா 46 கேமரா பொருத்தம்
ADDED : செப் 15, 2024 04:03 AM
மகுடஞ்சாவடி: சேலம் அருகே கஞ்சமலை காலங்கி சித்தர்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 6:30 முதல், 10:45 மணி வரை பல கட்டங்களாக நடக்கிறது. இதனால் நேற்று மதியம், 1:00 மணிக்கு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால் வாகனங்களை நிறுத்த, 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, சுத்தம் செய்யும் பணி முடிந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 46 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 10 வாகனங்களில், 100 கழிப்பறைகள் கொண்ட நடமாடும் கழிப்பறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.தீர்த்தக்குட ஊர்வலம்
இடைப்பாடி அருகே ஒட்டப்பட்டி ஆனந்தாயி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதனால் கல்வடங்கம் காவிரி ஆற்றில், ஏராளமான பக்தர்கள் நேற்று புனிதநீரை தீர்த்தக்குடங்களில் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள், ஒட்டிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து ஜலகண்டபுரம் சாலை வழியே தீர்த்தக்குடங்களை சுமந்து, அங்காளம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனை தரிசித்தனர்.