/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
/
தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
ADDED : மார் 25, 2024 01:37 AM
சேலம்:இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, 3ம் நாள் உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். அதற்கு முன், 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். ஈஸ்டர் திருவிழாவுக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று, குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
நான்கு ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில் பங்குத்தந்தை ஜோசப் லாசர் தலைமையில் ஏராாளமானோர், குருத்தோலை ஏந்தி, ஓசன்னா பாடலை பாடி ஊர்வலமாக வந்தனர். நிறைவில் சிறப்பு திருப்பலி நடந்தது.
அதேபோல் சூரமங்கலம் இருதய ஆண்டவர், அழகாபுரம் புனித மைக்கேல், செவ்வாய்ப்பேட்டை ஜெயராகினி, ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார், கோட்டை சி.எஸ்.ஐ., லெக்லர், ஜங்ஷன் சி.எஸ்.ஐ., உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
மேலும் பங்குத்தந்தை இருதயநாதன் தலைமையில் மேட்டூர் பங்கு மக்கள், சிலுவைகளுடன் சின்னபார்க்கில் இருந்து புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்துக்கு பேரணியாக சென்றனர். அங்கு நடந்த சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிக்கு பின், பேரணியில் பங்கேற்றவர்களுக்கு அப்பம் வழங்கப்பட்டது.
ஆத்துார் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து பங்கு தந்தை அருளப்பன், உதவி பங்கு தந்தை ரஞ்சித்குமார் உள்பட பலரும், கையில் குருத்தோலை ஏந்தி முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். அதேபோல் கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளியில் சிலுவை கிரி மலை பகுதியில் குருத்தோலை ஏந்தி பலர் ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர்.

