/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்சில் மருத்துவரை சீண்டிய கூலித்தொழிலாளி கைது
/
பஸ்சில் மருத்துவரை சீண்டிய கூலித்தொழிலாளி கைது
ADDED : ஆக 02, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த, 27 வயது பெண், தனியார் கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார்.
நேற்று அவர், கொண்டலாம்பட்டியில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு சென்று கொண்டிருந்தார். நெத்திமேடு அருகே வந்தபோது, அவரிடம், பஸ்சில் வந்த ஒருவர், சில்மிஷம் செய்துள்ளார். மருத்துவர் கூச்சலிடவே, சக பயணியர், அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், வீரபாண்டி அருகே பாலம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதாசிவம், 42, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.