/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழையால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு
/
மழையால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 11, 2024 03:38 AM
வீரபாண்டி: சேலம் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் திருமணிமுத்தாற்றில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பாய்ந்தோடியது. குறிப்பாக ஆட்டையாம்பட்டி அருகே இனாம் பைரோஜி, புதுப்பாளையத்தில் சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை திருமணிமுத்தாறு தரைப்பாலம் மூழ்கி வெள்ளம் வழிந்தோடியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை அறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர், பாலத்தில் சிக்கியிருந்த மரக்கிளைகள், பிளாஸ்டிக் கழிவை, பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தி தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தினர். இதனால் காலை 11:00 மணிக்கு மேல், தரைப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.

