/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டாஸ்மாக் கடையை அகற்ற தாமதம் வேலி போட்ட நில உரிமையாளர்
/
டாஸ்மாக் கடையை அகற்ற தாமதம் வேலி போட்ட நில உரிமையாளர்
டாஸ்மாக் கடையை அகற்ற தாமதம் வேலி போட்ட நில உரிமையாளர்
டாஸ்மாக் கடையை அகற்ற தாமதம் வேலி போட்ட நில உரிமையாளர்
ADDED : ஜூன் 14, 2024 01:58 AM
மேச்சேரி, மேச்சேரி - மேட்டூர் நெடுஞ்சாலையில் பொட்டனேரி, 4 ரோட்டில் இருந்து பழங்கோட்டை செல்லும் சாலையோரம் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடை அப்பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் நிலத்தில், 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது கோவிந்தராஜ், கடை அருகே உள்ள நிலத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டியுள்ளார். அதற்கு இடையூறாக மதுக்கடை இருந்ததால் அதை அகற்றக்கோரி ஓராண்டுக்கு முன், கடை ஊழியர்களிடம் கூறிவிட்டார். எனினும் கடை அகற்றப்படவில்லை.
விரக்தி அடைந்த கோவிந்தராஜ், ஒரு வாரத்துக்கு முன் மதுக்கடையை சுற்றி கம்பி வேலி அமைத்தார். மேச்சேரி போலீசார் பேச்சு நடத்திய பின், கோவிந்தராஜ், கடையின் ஒரு பகுதி வேலியை மட்டும் அகற்றி, 'குடி'மகன்கள் வந்து செல்ல வழிவிட்டார். எனினும் கடையை விரைவில் காலி செய்ய வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து கடை ஊழியர்கள் கூறுகையில், 'புது சரக்கு கொள்முதல் செய்தால், கடைக்கு எடுத்துச்செல்ல முடியாது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள், வேறு இடம் பார்க்கும்படி கூறியுள்ளனர். அருகே கடை பார்த்துள்ளோம். விரைவில் காலி செய்து விடுவோம்' என்றனர்.