/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாதிரி ஓட்டில் 'மக்கர்' ஓட்டுப்பதிவு தாமதம்
/
மாதிரி ஓட்டில் 'மக்கர்' ஓட்டுப்பதிவு தாமதம்
ADDED : ஏப் 20, 2024 07:52 AM
சேலம்: சேலம், அய்யந்திருமாளிகை, மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில் நேற்று காலை, 5:30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு தொடங்கியது. கட்சி முகவர்கள், தேர்தல் பணி அலுவலர்கள், அடுத்தடுத்து, 52 மாதிரி ஓட்டுகளை, 6:00 மணி வரை பதிவு செய்தனர். பின் இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட மாதிரி ஓட்டுகளை அழித்து, பூஜ்யம் நிலைக்கு கொண்டு வந்த பின், 7:00 மணிக்கு உண்மையான ஓட்டுப்பதிவு தொடங்க வேண்டும்.
ஆனால் பலமுறை முயன்றும் மாதிரி ஓட்டுகள் அழியாமல், 'மக்கர்' செய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி மாதிரி ஓட்டுகள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இருந்து அழிக்கப்பட்டன. இதனால் தாமதமாக, 7:30 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்தது. அதன்பிறகே மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி, ஓட்டை பதிவு செய்தார்.
220 மதுபாட்டில் பறிமுதல்
சேலம்: ஓமலுார் அருகே சாமிநாயக்கன்பட்டி, பழைய காலனியை சேர்ந்தவர் சரவணன், 41. அங்குள்ள பழைய குடோனில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக, நேற்று முன்தினம் கருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றதும், சரவணன் தலைமறைவானார். அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 220 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

