/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகுடஞ்சாவடி ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?
/
மகுடஞ்சாவடி ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?
மகுடஞ்சாவடி ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?
மகுடஞ்சாவடி ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?
ADDED : செப் 03, 2024 03:12 AM
மகுடஞ்சாவடி,: மகுடஞ்சாவடி ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சியில், 4,763 வீடுகள், 115 கடைகள் உள்ளன. மக்கள் தொகை, 10 ஆயிரத்து 459. மொத்த வாக்காளர்கள், 7,754 பேர். ஆண்டுதோறும் வீட்டு-வரியாக ஐந்து லட்சத்து, 78 ஆயிரத்து, 931 ரூபாய் வசூலிக்கப்ப-டுகிறது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆண்டு-தோறும், 2,317 பேர் வேலை செய்கின்றனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி பள்ளி, அரசு மருத்துவமனை உள்ளது. அதே போல் கூடலுார் ஊராட்சியில், 2,612 வீடுகள், 25 கடைகள் உள்ளன. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 1,900 பேர் வேலை செய்கின்றனர். வீட்டு வரி ஆண்டுதோறும், இரண்டு லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இரண்டு ஊராட்சிகளையும் இணைத்து, மகுடஞ்சாவடியை பேரூ-ராட்சியாக தரம் உயர்த்தினால் மக்கள் பல்வேறு சலுகைகள் பெறலாம்.
இது குறித்து, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் கண்ணன், 35, கூறுகையில்,''மகுடஞ்சாவடி பகுதி-களில், 50க்கும் மேற்பட்ட ஜின்னிங் மில்கள் உள்ளன. ரயில் நிலையம் உள்ளது. மகுடஞ்சாவடியை பேரூராட்சியாக தரம் உயர்த்தினால் பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகம் அமைய வாய்ப்-புள்ளது. இதன் மூலம் தொழில் வாய்ப்புகள் பெருகி, நிதி அதிக-ரிக்கும். கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் முறையான குடிநீர் இணைப்புகளை பெறலாம். தரமான சாலை வசதி கிடைக்கும். திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், பொது சுகாதார திட்டங்கள் கிடைக்கும். பேரூராட்சியில் தொகுப்பு வீடுகள் கிடைக்க எந்த தடையும் இல்லை. எண்ணற்ற சலுகைகள் கிடைக்க, மகுடஞ்சா-வடியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மகுடஞ்சாவடி பி.டி.ஓ., செந்தில் முருகன் கூறுகையில், ''இது குறித்து நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. மாவட்ட கலெக்-டர்தான் முடிவெடுக்க முடியும்,'' என்றார்.
மகுடஞ்சாவடி ஊராட்சி தலைவி மேகலா, 38, கூறுகையில்,'' மகுடஞ்சாவடியில் உள்ள, 12 வார்டுகளும் கிராமத்தில் பின்தங்-கிய பகுதியாக உள்ளது. ஊராட்சியில், 765 ெஹக்டரில் புன்செய் நிலம் உள்ளது. மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். பேரூராட்சியாக தரம் உயர்த்தினால், வரிகள் உயர்ந்து பாமர மக்கள் கட்ட முடியாமல் தவிப்பர். 100 நாள் வேலை வாய்ப்பு இல்லாமல் போகும். பேரூராட்சியாக தரம் உயர்த்த எந்த முகாந்-திரமும் இல்லை. சிலர் சுயலாபத்திற்காக பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அதிகாரிகளுக்கும், ஆளும் தரப்பிற்கும் மனு அளிக்கின்றனர்,'' என்றார்.