/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலர் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
/
மலர் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 12, 2024 07:40 AM
ஆத்துார் : ஆத்துார், புதுப்பேட்டை மேம்பாலம் அருகே உள்ள, மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி தாஜியாஸ்ரீ, 500க்கு, 490 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி ரம்யா, 487, மாணவர் சூர்யா, 483 மதிப்பெண்கள் பெற்று, 2, 3ம் இடங்களை பிடித்தனர்.
ஆங்கிலத்தில் ஒருவர், கணிதத்தில், 2 பேர், சமூக அறிவியலில், 2 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர். தமிழில், 2 பேர், ஆங்கிலத்தில், 4 பேர், அறிவியலில், 2 பேர், 99 மதிப்பெண்களை பெற்றனர். மேலும், 480க்கு மேல், 3 பேர்; 450க்கு மேல், 16 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர். இத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று, பள்ளி சாதனை படைத்துள்ளது. பள்ளி அளவில் சாதனை புரிந்த மாணவ, மாணவியரை, அதன் தலைவர் மணி, செயலர் ரதிதேவி, பொருளாளர் நிரேஷ்ராஜ், முதல்வர் சுகுணா ராஜா ஆகியோர் பாராட்டினர்.