/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணியாளர் சங்கத்தில் முறைகேடு: குற்றமுறை விசாரணைக்கு உத்தரவு
/
பணியாளர் சங்கத்தில் முறைகேடு: குற்றமுறை விசாரணைக்கு உத்தரவு
பணியாளர் சங்கத்தில் முறைகேடு: குற்றமுறை விசாரணைக்கு உத்தரவு
பணியாளர் சங்கத்தில் முறைகேடு: குற்றமுறை விசாரணைக்கு உத்தரவு
ADDED : ஏப் 28, 2024 04:33 AM
சேலம்: மேச்சேரியில் ஜே.எஸ்.டபுள்யு., ஸ்டீல் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய மற்றும் கடன் சங்கம் உள்ளது.
அதில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மத்திய கால கடன் உள்ளிட்ட இனங்களில், கணக்குகளை மாற்றி எழுதி, 2013ல் இருந்து முறைகேடு நடந்து வருவது கள ஆய்வில் தெரிந்தது.
இதையடுத்து குற்றமுறை விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓமலுார் சரக துணைப்பதிவாளர் குணசேகரன், கடந்த, 25ல் உத்தரவிட்டார்.
விசாரணை அதிகாரியாக, மேச்சேரி கள அலுவலர் புனிதா நியமிக்கப்பட்டார். 2013 ஏப்., 1 முதல், சங்கத்தில் வழங்கப்பட்ட அனைத்து வகை கடன், உறுப்பினர்களிடம் வசூலிக்கப்பட்ட பங்குத்தொகை, கடன் மீதான வசூல் விபரம் உள்ளிட்ட அனைத்து இனங்களையும் விசாரித்து அறிக்கையாக வழங்கும்படி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.