/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது
/
விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது
ADDED : ஜூன் 07, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி;கெங்கவல்லி அருகே ஜங்கமசமுத்திரம், வள்ளுவர் நகரில் உள்ள செங்கோட்டுவேல், 50, தோட்டத்தில் நேற்று தம்மம்பட்டி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பேரலில், 50 லிட்டர் சாராய ஊறல் இருந்ததால் கொட்டி அழித்தனர். சாராயம் காய்ச்ச வைத்திருந்த அடுப்பு, பாத்திரங்களை உடைத்தனர். விசாரணையில் செங்கோட்டு
வேல் நிலத்தை, தம்மம்பட்டி, 13வது வார்டை சேர்ந்த வெங்கடேஷ்குமார், 35, குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்த நிலையில் அவர் சாராயம் காய்ச்சியது தெரிந்தது. வெங்கடேஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம், 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.