/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீசாரை தள்ளிவிட்டவர் கைது: மதுபாட்டில் பறிமுதல்
/
போலீசாரை தள்ளிவிட்டவர் கைது: மதுபாட்டில் பறிமுதல்
ADDED : ஆக 18, 2024 04:16 AM
ஆத்துார்: ஆத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷன் ஏட்டுகள் மோனிஷா, சுகுணா. இவர்கள் நேற்று, ராமநாயக்கன்பாளையத்தில் ஆய்வு செய்தபோது, அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி சங்கீதா, 40, என்பவர், 'ஜீபிடர்' மொபட்டில் மதுபாட்டில் வைத்து விற்ப-னையில் ஈடுபட்டதால், அவரை போலீசார் பிடித்தனர்.
அப்போது போலீசாரை தள்ளிவிட்டு சங்கீதா தப்ப முயன்றார். அவரை விரட்டி பிடித்தபோது, அவரது மகளான, தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவி சுஜாதா, 20, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டார்.தொடர்ந்து தாயை கைது செய்யக்கூடாது எனக்கூறி உடலில் தீ வைக்க முயன்றார். மக்கள் உதவியுடன் சுஜாதாவை மீட்ட போலீசார், மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினர். மேலும் மொபட்டில் விஷ நெடியுடன் கூடிய மது இருந்ததால் மொபட்-டுடன் பறிமுதல் செய்தனர். சங்கீதாவை கைது செய்து, சுஜாதா மீது வழக்குப் பதிந்தனர்.

