/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையில் 'வெறிச்'
/
ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையில் 'வெறிச்'
ADDED : ஆக 03, 2024 11:39 PM
இடைப்பாடி:ஆடிப்பெருக்கில் காவிரி கரையோர பகுதிகளான பூலாம்பட்டி, கல்வடங்கம், கோனேரிப்பட்டி பகுதிகள் வெறிச்சோடின.
ஆடிப்பெருக்கில் காவிரி கரையின் அனைத்து இடங்களிலும் குல தெய்வ சிலைகள், கத்தி, மணி, அரிவாள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து, அவற்றுக்கு பூஜை செய்து வழிபடுவது மக்கள் வழக்கம்.
இதற்கு கல்வடங்கம், கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி ஆகிய காவிரி கரையோரங்களில் ஏராளமான மக்கள் கூடுவர். ஆனால் இந்த ஆண்டு காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், காவிரி கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கல்வடங்கம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள் நேற்று வெறிச்சோடின.
அதே நேரம் அரசு சார்பில் அனுமதிக்கப்பட்டிருந்த பில்லுக்குறிச்சியில், மேட்டூர் அணையின் கிழக்குக்கரை வாய்க்காலில் குறைந்த அளவில் மக்கள் நீராடி ஆடிப்பெருக்கை கொண்டாடினர். மேலும் குல தெய்வ சிலைகள், கத்தி, மணி, அரிவாள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தும் அவற்றுக்கு பூஜை செய்தும் வழிபட்டனர்.