/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுங்கச்சாவடியில் சாலைமறியல்
/
மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுங்கச்சாவடியில் சாலைமறியல்
மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுங்கச்சாவடியில் சாலைமறியல்
மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுங்கச்சாவடியில் சாலைமறியல்
ADDED : ஜூலை 31, 2024 07:44 AM
வாழப்பாடி: 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் பணி-புரியும் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இதற்கு சேலத்தில் இருந்து, 3 வேன்களில் சென்னை நோக்கி, 100க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30க்கு அவர்களை, வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவ-டியில் வாழப்பாடி போலீசார் தடுத்தனர். இதனால் ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஊழி-யர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இருப்-பினும் அவர்கள் செல்ல, போலீசார் அனுமதிக்-கவில்லை. இதனால் வேறு வழியின்றி, அவர்கள் மீண்டும் சேலம் நோக்கி திரும்பிச்-சென்றனர்.