/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
48,500 கனஅடியாக குறைந்த மேட்டூர் அணை உபரி நீர்
/
48,500 கனஅடியாக குறைந்த மேட்டூர் அணை உபரி நீர்
ADDED : ஆக 03, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், ஜூலை, 30ம் தேதி முதல், உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 1.70 லட்சம் கன அடி நீர் வந்தது. இதில் பாசனத்துக்கு, 21,500 கனஅடி போக, 1.48 லட்சம் கன அடி உபரிநீர், 16 கண் மதகு வழியே வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகா அணைகளின் உபரிநீர் திறப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, 1.10 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், 70,000 கன அடியாக நேற்று மாலை குறைந்தது. அதற்கேற்ப, 16 கண் மதகில், உபரி நீர் திறப்பு, 48,500 கன அடியாக குறைக்கப்பட்டது.