ADDED : மே 26, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை கொட்டியதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
கடந்த, 23ம் தேதி, 633 கன அடியாக இருந்த நீர்வரத்து, 1,061 கனஅடியாக நேற்று முன்தினம் உயர்ந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து விட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று, 784 கன அடியாக நீர்வரத்து சரிந்தது. அணையில் இருந்து குடிநீருக்கு, 2,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம், 48.15 அடியாக இருந்தது.