/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 73,673 கனஅடியாக உயர்வு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 73,673 கனஅடியாக உயர்வு
ADDED : ஆக 04, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறந்த உபரி நீர் தொடர்ச்சியாக வந்ததால், கடந்த, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. கடந்த, 2ல் அதிகபட்சமாக வினாடிக்கு, 1.71 லட்சம் கனஅடி உபரிநீர் வந்தது. நேற்று மதியம் அணைக்கு வினாடிக்கு, 70,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை, 4:00 மணிக்கு, 73,673 கனஅடியாக, சற்று உயர்ந்தது.
அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியே வினாடிக்கு, 21,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. தவிர, கால்வாய் பாசனத்துக்கு, 500 கன அடி, உபரியாக, 16 கண் மதகில் வினாடிக்கு, 48,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.