/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்மட்டம் 20 நாளில் 44 அடி உயர்வு
/
மேட்டூர் அணை நீர்மட்டம் 20 நாளில் 44 அடி உயர்வு
ADDED : ஜூலை 24, 2024 10:21 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 20 நாளில், 44 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு, 34 டி.எம்.சி., அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. அதற்கேற்ப நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 76,794 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மாலை, 72,731 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீருக்கு வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
நேற்று மட்டும் அணை நீர்மட்டம், 6.5 அடி, நீர்இருப்பு, 7 டி.எம்.சி., அதிகரித்தது. அதன்படி அணை நீர்மட்டம், 83.98 அடி, நீர்இருப்பு, 46.03 டி.எம்.சி.,யாக இருந்தது. அதேநேரம் நேற்று கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்தும் குறைந்தது. அதற்கேற்ப இரு அணைகளில் இருந்து வினாடிக்கு, 55,880 கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளது.
கடந்த, 3ல் மேட்டூர் அணை நீர்மட்டம், 39.65 அடி, நீர்இருப்பு, 11.91 டி.எம்.சி.,யாக இருந்தது. பின் நீர்வரத்து அதிகரிப்பால், 20 நாட்களில் மட்டும் அணை நீர்மட்டம், 44.33 அடி, நீர் இருப்பு, 34.12 டி.எம்.சி., அதிகரித்துள்ளது.