/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு
/
மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : செப் 01, 2024 03:33 AM
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு, 13,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 5,349 கனஅ-டியாக நீர்வரத்து, 6,396 கன அடியாக நேற்று அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை, 13,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்-ததால், நேற்று முன்தினம், 116.02 அடியாக இருந்த நீர்மட்டம் 115.56 அடியாக நேற்று சரிந்தது. கடந்த, 10 நாட்களில் நீர்-மட்டம், 5 அடி, நீர் இருப்பு, 7 டி.எம்.சி., குறைந்துள்ளது.
தலைமை பொறியாளர் ஆய்வுநீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளன் குமார், மேட்டூர் அணையில் நேற்று ஆய்வு செய்தார். வலதுகரை, அணை கட்டடத்தில் உள்ள சுரங்கத்தை பார்வையிட்டார். தொடர்ந்து வலதுகரையில் இருந்து காவிரி விசைப்படகில் திப்-பம்பட்டி வரை சென்றார். அங்கு விசைப்படகில் இருந்தபடி அணையில் இருந்து உபரிநீர் எடுத்து, ஏரிகளுக்கு அனுப்பும் நீரேற்று நிலையத்தை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.