/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகள் பிறந்தநாளுக்கு தந்தை வராததால் தாய் தற்கொலை
/
மகள் பிறந்தநாளுக்கு தந்தை வராததால் தாய் தற்கொலை
ADDED : செப் 09, 2024 07:16 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த குருமூர்த்தி, தனியார் பால் நிறுவனத்தில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி யுவராணி, 23. இவர்களது மகன் அம்தேஷ், 7, மகள் அமிதஸ்ரீ, 6. கடந்த, 2ல் குருமூர்த்தி வேலை விஷயமாக ஹைதராபாத் சென்றுவிட்டு, 4 இரவு, 11:00 மணிக்கு வீடு திரும்பினார்.
அப்போது மகள் பிறந்தநாள் விழாவுக்கு வராதது தொடர்பாக யுவராணி கேட்டுள்ளார். அதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வேதனை அடைந்த யுவராணி, மறுநாள் சில மாத்திரைகளை கரைத்து குடித்து மயக்கம் அடைந்தார். அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.