/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுவரில் கொட்டும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சுவரில் கொட்டும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சுவரில் கொட்டும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சுவரில் கொட்டும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஆக 26, 2024 02:57 AM
வீரபாண்டி: சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் அருகே
பழைய சூரமங்கலம் செல்லும் வழியில் சுரங்கப்பாலம் உள்ளது. அதன் தரையில் இரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் வீணாக வழிந்து கொண்டிருக்கிறது.
இதனால் தரையில் அரிப்புகளால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்-பட்டு தண்ணீர் தேங்கி பாசி படர்ந்துள்ளன. இதை சரி செய்யாத நிலையில், 10 நாட்களாக சுரங்கப்பால சுவரில் இருந்து இரு துளைகள் வழியே, குடிநீர் குழாயில் இருந்து விழுவதை போன்று தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது.
பகலிலேயே இருள் சூழ்ந்த பகுதியாக உள்ள பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள் மீது தண்ணீர் கொட்டுகிறது. இதை தவிர்க்க பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாலை நடுப்பகுதியில் செல்கின்-றனர்.
அப்போது ஒரே நேரத்தில் எதிர் எதிரே வாகனங்கள் வரும் போதும், கொட்டும் தண்ணீரில் இருந்து தப்பிக்க முயலும்-போதும், பாசியில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அதனால் பாலத்தின் தரை, சுவர்களில் இருந்து கொட்டும் தண்-ணீரை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்
வலியுறுத்தினர்.

