ADDED : ஆக 22, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓடும் வேனில் தீ: தப்பிய டிரைவர்
மேட்டூர், ஆக. 22-
ஈரோடு, பெருந்துறை தாலுகா சிங்காநல்லுார், கரும்புலியான் தோட்டத்தை சேர்ந்த டிரைவர் கதிர்வேல், 45. நேற்று நண்பரின் ஆம்னி ஈகோ வேனில் இயற்கை உரம் ஏற்றிக்கொண்டு கவுந்தம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டார். காலை, 6:15 மணிக்கு, மேட்டூர், தங்கமாபுரிபட்டணம் பஸ் ஸ்டாப் அருகே, 16 கண் மதகு புது பாலம் செல்லும் பிரிவில் சென்றபோது, வேன் பேட்டரி சூடாகி தீப்பற்றி எரியத்தொடங்கியது. டிரைவர், வேனை நிறுத்திவிட்டு இறங்கினார்.
தொடர்ந்து அவர் தகவல்படி, விரைந்து வந்த, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், தீயை முற்றிலும் அணைத்தனர். இருப்பினும் வேன் சற்று சேதம் அடைந்தது.