/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்து கடைகளை அகற்ற எம்.பி., எச்சரிக்கை
/
சந்து கடைகளை அகற்ற எம்.பி., எச்சரிக்கை
ADDED : ஜூலை 19, 2024 02:31 AM
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த கூட்டாத்துப்பட்டி பகுதியில், நேற்று மக்க-ளுடன் முதல்வர் திட்ட முகாம் நான்கு ஊராட்சிகளுக்கு நடை-பெற்றது. இதில் வருவாய்த்துறை, மின்வாரியத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். முகாமில், கள்ளக்குறிச்சி எம்பி., மலையரசன் பங்-கேற்றார். அப்போது, கூட்டத்துப்பட்டி ஊராட்சி மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் அப்பகுதியில் செயல்படும் சந்து கடைகளை அகற்றக் கோரி புகார் கொடுத்தும், போலீசார் அகற்றவில்லை என புகார் தெரிவித்தனர். இதனால் எம்பி., மலையரசன், முகாமில் இருந்த காரிப்பட்டி எஸ்.ஐ., முனியரசனை அழைத்து, சந்து கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என எச்சரித்தார்.