/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாயமான பா.ஜ., நிர்வாகி திருச்செந்துாரில் மீட்பு
/
மாயமான பா.ஜ., நிர்வாகி திருச்செந்துாரில் மீட்பு
ADDED : மே 10, 2024 11:23 PM
ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார், விநாயகபுரம், செந்தில் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்மணி, 49; நரசிங்கபுரம் பா.ஜ., நகர செயலரான இவர், நடன குழு நடத்துகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, 44; பா.ஜ., சேலம் கிழக்கு மாவட்ட கலை, கலாசார பிரிவு செயலர். சில நாட்களுக்கு முன், பா.ஜ., நிர்வாகிகள் சிலர், விஜயலட்சுமி குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்தை பதிவிட்டனர்.
இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர், கடந்த, 8ல் மாயமானார். சுரேஷ்மணி புகாரின்படி, ஆத்துார் டவுன் போலீசார் தேடினர். அவர், துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் இருப்பதாக தகவல் கிடைக்க, ஆத்துார் டவுன் போலீசார் அங்கு சென்று, விஜயலட்சுமியை மீட்டனர். மேலும், தற்கொலை முடிவு எடுக்கக்கூடாது என எச்சரித்து, அவரை கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.