/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இறைச்சி கடையில் திருடும் மர்ம நபர்; 'சிசிடிவி' வைரல்
/
இறைச்சி கடையில் திருடும் மர்ம நபர்; 'சிசிடிவி' வைரல்
இறைச்சி கடையில் திருடும் மர்ம நபர்; 'சிசிடிவி' வைரல்
இறைச்சி கடையில் திருடும் மர்ம நபர்; 'சிசிடிவி' வைரல்
ADDED : மே 28, 2024 07:29 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி பகுதியில் உள்ள இறைச்சி கடையில், மர்ம நபர் பொருட்களை திருடும் 'சிசிடிவி' வீடியோ வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, வடக்கு வீதியில் ரியாஸ், 50, என்பவருக்கு சொந்தமான ஆட்டிறைச்சி கடை உள்ளது. வெளிப்புறத்தில் இறைச்சி வெட்டுவதற்காக பலகை உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
வழக்கம்போல் ரியாஸ் கடையை பூட்டி விட்டு இரவில் சென்ற பின், நள்ளிரவில் அவ்வழியே சென்ற மர்ம நபர் ஒருவர் இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பலகை உள்ளிட்ட, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, 'சிசிடிவி' வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரியாஸ் அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.