/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய வருவாய் வழி தேர்வு; விடை குறியீடு வெளியீடு
/
தேசிய வருவாய் வழி தேர்வு; விடை குறியீடு வெளியீடு
ADDED : மார் 11, 2025 07:10 AM
சேலம்: தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை தேர்வுக்கான விடை குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, 9 ம் வகுப்பு முதல், பிளஸ் 2 முடிக்கும் வரை, நான்கு ஆண்டுகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கான தேர்வு பிப்., 22ல் நடந்தது. மனத்திறன் தேர்வு, படிப்பறிவுத்திறன் தேர்வு என இரு பகுதிகளாக நடத்தப்பட்ட தேர்வின் உத்தேச விடை குறிப்புகளை, நேற்று தேர்வுத்துறை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விடை குறையீட்டில் பெற்றோர் அல்லது மாணவர்களுக்கு, ஆட்சேபம் அல்லது மாற்றம் இருப்பின், மார்ச் 15 க்குள் தெரிவிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின் இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு செய்யப்பட்டோர் விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.