ADDED : ஜூன் 08, 2024 02:16 AM
இடைப்பாடி: இடைப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளில் மருந்து கடைகளில் ஊசி போடுவதாகவும், சிலர் வீடு தேடி சென்று ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரையடுத்து இடைப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கோகுலகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
இடைப்பாடி, ஆடையூர், பக்கநாடு, கோரணம்பட்டி, எட்டிக்குட்டைமேடு, மூலப்பாதை, கோணசமுத்திரம் பகுதிகளில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் சிலர் வீடு, வீடாக சென்று மருத்துவம் பார்த்து வருவதாகவும், அப்பகுதிகளில் மருந்து கடை வைத்துள்ள சிலர் உடல்நிலை சரியில்லாத மக்களுக்கு வைத்தியம் பார்ப்பதாகவும், இடைப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கோகுலகிருஷ்ணனுக்கு புகார்
சென்றது.
இதையடுத்து மருத்துவ அலுவலர் கோகுலகிருஷ்ணன், மருந்தாளுனர் மோகன் ஆகியோர் ஆடையூர், கோரணம்பட்டி, எட்டிக்குட்டைமேடு, மூலப்பாதை பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் ஆய்வு செய்தனர். அங்கு ஆங்கில மருத்துவம் மூலம், ஊசி போடுகிறார்களா என 10க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு
செய்தனர்.