/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்தல் புறக்கணிப்பு மக்களிடம் அதிகாரிகள் பேச்சு
/
தேர்தல் புறக்கணிப்பு மக்களிடம் அதிகாரிகள் பேச்சு
ADDED : மார் 29, 2024 01:36 AM
ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுார் ஒன்றியம் சக்கரைசெட்டிப்பட்டியில் உள்ள நாலுகால் ரயில்வே பாலம், தொப்பளாங்காட்டுவளவு சாலை, சரபங்கா ஆற்றில் தடுப்பணை ஆகியவற்றை சீரமைக்கக்கோரி, 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் முதல், வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி, வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்றிரவு, ஓமலுார் பி.டி.ஓ., நல்லதம்பி, ஓமலுார் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமார், மக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, 'தார்ச்சாலை அமைக்க, 15வது நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் பணி தொடங்கப்படும். ரயில்வே பாலம் குறித்து அத்துறையினருடன் ஆய்வு செய்யப்படும். தடுப்பணை குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்துவிட்டு சென்றனர்.

