/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நில மோசடி புகார் மேலும் ஒருவர் கைது
/
நில மோசடி புகார் மேலும் ஒருவர் கைது
ADDED : ஆக 01, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், பெரமனுார் நாராயண பிள்ளை தெருவை சேர்ந்த யுவராஜ் மனைவி ஜீவிதா, 39. இவரிடம், பனமரத்துப்பட்டி, பெரிய மாரியம்மன் கோவில் பகுதியை சேந்த மணிகண்டன், 34, ஓமலுார் மகேந்திரன், 45, ஆகியோர், கன்னங்குறிச்சியில் நிலம் வாங்கித்தருவதாக கூறி, 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.
ஆனால் நீண்ட நாளாகியும் ஜீவிதாவுக்கு நிலம் வாங்கி கொடுக்க-வில்லை. பணத்தையும் திருப்பிதரவில்லை. இதுகுறித்து ஜீவிதா கடந்த, 10ல் அளித்த புகார்படி பள்ளப்பட்டி போலீசார் விசா-ரித்து, மறுநாள் மகேந்திரனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர்.