/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
12 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு
/
12 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு
ADDED : ஜூலை 20, 2024 09:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கடம்பூரில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் உமா, 12 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்கினார்.
அப்போது கெங்கவல்லி ஒன்றியத்தல் ஊரக குடியிருப்பு பழுதுபார்த்தல் திட்டத்தில், 167 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, 32,000 முதல், 1.50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு, 1.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, பி.டி.ஓ., சந்திரசேகர் தெரிவித்தார்.