/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாய்மை பணியாளர் மீது ஊராட்சி செயலர் தாக்குதல்?
/
துாய்மை பணியாளர் மீது ஊராட்சி செயலர் தாக்குதல்?
ADDED : ஆக 09, 2024 02:28 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே கூலமேட்டை சேர்ந்தவர் முருகேசன், 48. அதே கிராமத்தில், துாய்மை பணியாளராக உள்ளார். நேற்று ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆத்துார் ஊரக போலீசார், ஆத்துார் பி.டி.ஓ., செந்தில் விசாரிக்-கின்றனர்.
இதுகுறித்து முருகேசன் கூறுகையில், ''3 நாள் சம்பளம், 700 ரூபாய் குறைத்தது குறித்து கேட்டபோது, ஊராட்சி செயலர் செந்-தில்குமார் தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதால், மருத்துவ
மனையில் உள்ளேன்,'' என்றார்.
செந்தில்குமார் கூறுகையில், 'பணிக்கு வராத நாளுக்கு, 700 ரூபாய் சம்பளம் பிடிக்கப்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பி தகராறு செய்தார். நான் அவரை திட்டவோ, அடிக்கவோ இல்லை,'' என்றார்.
பி.டி.ஓ., செந்தில் கூறுகை யில், ''இருதரப்பினரிடமும் விசா-ரணை செய்துள்ளோம். செயலர், 'மெமோ' வழங்காமல் சம்பள பிடித்தம் செய்தது குறித்து விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு பின், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.