/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மஞ்சள் நீராட்டுதலுடன் பங்குனி திருவிழா நிறைவு
/
மஞ்சள் நீராட்டுதலுடன் பங்குனி திருவிழா நிறைவு
ADDED : ஏப் 06, 2024 01:44 AM
வீரபாண்டி:வீரபாண்டி
பெரிய மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த மார்ச், 20ல்
தொடங்கியது.
நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை, பொங்கல் வைத்தல்,
அக்னி கரகம், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மஞ்சள்
நீராட்டு ஊர்வலம், கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியில், பக்தர்கள்
ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பொடிகளை துாவி, முகத்தில் பூசியும், தண்ணீரை
பீய்ச்சி அடித்து ஆடியபடி பங்கேற்றனர். இத்துடன், 15 நாட்கள் நடந்த
திருவிழா நிறைவு பெற்றது. அதேபோல் அரியானுார், பாலம்பட்டி,
இளம்பிள்ளை உள்ளிட்ட மாரியம்மன், காளியம்மன் கோவில்களிலும் பங்குனி
திருவிழா மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

