/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை கந்தசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
/
நாளை கந்தசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
ADDED : மார் 24, 2024 02:01 AM
வீரபாண்டி, சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு விரதமிருக்கும் பக்தர்கள், திருக்காவடிகளுடன், இன்று மாலை, 4:00 மணிக்கு கோவிலில் இருந்து ஆற்றுக்கு செல்வர்.
அங்கு புனிதநீரால் அபிேஷகம் செய்து சிறப்பு பூஜைக்கு பின், ஊர்வலமாக காவடியுடன் கந்தசாமி கோவிலுக்கு வருவர்.
நாளை காலை, 6:00 மணிக்கு கோ பூஜையுடன் மூலவர் கந்த
சாமிக்கு பலவித மங்கல பொருட்களால் அபிேஷகம் செய்து பூஜை நடக்கும். மாலையில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி மயில் வாகனத்தில் கோவிலில் உலா வருவார்.
இதற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் கிருஷ்ணன், பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா உள்ளிட்ட உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.
அதேபோல் இன்று சேலம்,
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் உற்சவர் ஆறுமுகனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது. பூலாவரி சுப்ரமணியர் கோவிலில் நாளை மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.

