/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அலையன்ஸ் ஏர்' விமானம் ரத்தால் பயணியர் அதிருப்தி
/
'அலையன்ஸ் ஏர்' விமானம் ரத்தால் பயணியர் அதிருப்தி
ADDED : ஜூலை 07, 2024 01:24 AM
ஓமலுார் : 'அலையன்ஸ் ஏர்' விமான நிறுவனம் சார்பில் பெங்களூரில் இருந்து தினமும் மதியம் புறப்படும் விமானம், சேலம் வந்து, 4:10க்கு கொச்சி புறப்பட்டு பின் அங்கிருந்து சேலம் வந்து மீண்டும் பெங்களூரூ செல்கிறது. நேற்று முன்தினம் சேலம் விமான நிலையத்தில், 48 பயணியர் கொச்சி செல்ல காத்திருந்தனர். அதே விமானத்தில் பெங்களூரு செல்ல, 36 பயணியர் வந்திருந்தனர்.
ஆனால் பெங்களூரில் இருந்து, 3:15க்கு சேலம் வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பல்வேறு பணிக்கு பெங்களூரு, கொச்சி செல்ல திட்டமிட்ட நிலையில் திடீரென ரத்து செய்தால் என்ன செய்வது என பயணியர், அதிகாரிகளிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். பின் வேறு வழியின்றி பயணியர் திரும்பிச்சென்றனர்.