/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டாஸ்மாக் கடை இடம் மாற்றக்கோரி வாகனத்தை சிறை பிடித்த மக்கள்
/
டாஸ்மாக் கடை இடம் மாற்றக்கோரி வாகனத்தை சிறை பிடித்த மக்கள்
டாஸ்மாக் கடை இடம் மாற்றக்கோரி வாகனத்தை சிறை பிடித்த மக்கள்
டாஸ்மாக் கடை இடம் மாற்றக்கோரி வாகனத்தை சிறை பிடித்த மக்கள்
ADDED : மே 28, 2024 07:43 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், கரைமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது இடத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, டாஸ்மாக் கடை (எண்: 7161) செயல்பட்டு வருகிறது.
இந்த கடையை இடமாற்றம் செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த, 2019ல், ராஜேந்திரன் உயிரிழந்தார். ஐந்து ஆண்டுகளாக, டாஸ்மாக் கடையை அகற்றும்படி, ராஜேந்திரன் குடும்பத்தினர், பொதுமக்கள், டாஸ்மாக் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர். ஆனால், கடையை இடமாற்றம் செய்யவில்லை.
நேற்று மாலை, 5:30 மணியளவில், 'டாஸ்மாக்' கடைக்கு, மதுபானங்கள் இறக்குவதற்கு வந்த வாகனத்தை, பொதுமக்கள் சிறைபிடித்தனர். கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார், 'டாஸ்மாக் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, கடை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்த பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.