/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மர்ம விலங்கு கடித்து பசு மாடு காயம் மக்கள் இரவில் நடமாட வேண்டாம்
/
மர்ம விலங்கு கடித்து பசு மாடு காயம் மக்கள் இரவில் நடமாட வேண்டாம்
மர்ம விலங்கு கடித்து பசு மாடு காயம் மக்கள் இரவில் நடமாட வேண்டாம்
மர்ம விலங்கு கடித்து பசு மாடு காயம் மக்கள் இரவில் நடமாட வேண்டாம்
ADDED : மே 30, 2024 01:33 AM
மேச்சேரி,மர்ம விலங்கு கடித்து பசு மாடு காயம் அடைந்ததால், 'மக்கள் இரவில் நடமாட வேண்டாம்' என, வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி அரசமரத்துார் காட்டுவளவை சேர்ந்த விவசாயி ராமஜெயம், 35. இவர் வீடு அருகே தோட்டத்தில் பசு மாடுகள், கன்றுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு, இவரது பசு சத்தம் போட்ட நிலையில் வெளியே வந்து பார்த்தார். அப்போது மாட்டின் கழுத்து பகுதியில் கடிக்கப்பட்டு ரத்தம் வடிந்தது. மாட்டை கடித்த மர்மவிலங்கு சிறுத்தையாக இருக்கக்கூடும் என, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த, 22 இரவு ராமஜெயத்தின் ஒரு பசுங்கன்று, மர்ம விலங்கு கடித்ததால் இறந்தது. தொடர்ந்து டேனிஷ்பேட்டை வன ஊழியர்கள், அவரது தோட்டம் உள்பட, 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர். எனினும் கேமரா பொருத்தாத இடத்தில் தற்போது பசு இருந்ததால்
பதிவாகவில்லை.
நேற்று டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ், தொப்பூர் பிரிவு வனவர் வீரக்குமார், அலுவலர்கள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் மேச்சேரி வருவாய்த்துறையினர், காயம் அடைந்த பசுவை பார்வையிட்டனர். இதையடுத்து, 'இரவில் நடமாட வேண்டாம்' என வருவாய்த்துறை சார்பில் வெள்ளாறு, தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கிராமங்களில், வாகனத்தில் சென்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.