/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டா வழங்காததால் ஓட்டுப்போடாத மக்கள்
/
பட்டா வழங்காததால் ஓட்டுப்போடாத மக்கள்
ADDED : ஏப் 20, 2024 07:52 AM
வீரபாண்டி: சேலம், இரும்பாலைக்கு, 53 ஆண்டுகளுக்கு முன் நிலம் கொடுத்த, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடமாக வட்டமுத்தாம்பட்டி காமராஜ் நகரில் நிலம் கொடுத்துள்ளனர்.
அங்கு தற்போது, 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் மாற்று இடம் வழங்கப்பட்டவர்களுக்கு இன்று வரை பட்டா கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இரு நாட்களுக்கு முன், தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர்.
சேலம் ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தி, ஓட்டுப்போட அறிவுறுத்தினர். ஆனால் பட்டா கிடைக்காமல் ஓட்டுப்போட மாட்டோம் என உறுதியாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சு நடத்தினர்.
அதில் அங்குள்ள, 453 பேரில், 100க்கும் மேற்பட்டோர் மட்டும், மதியத்துக்கு மேல் வந்து ஓட்டு போட்டனர். 300க்கும் மேற்பட்டோர் ஓட்டுப்போடாமல் தேர்தலை புறக்கணித்து சிறிது நேரம்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

